எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா - பாகம்-12.. ப்ரொஸ்யூமர் கேமரா..
வணக்கம் நண்பர்களே..
prosumer camera என்பது proffessional தேவை மற்றும் consumer தேவை, இவ்விரண்டு கேமராக்களின் கலவை என்பதால் இதை prosumer கேமரா என்று கூறுகின்றனர்..
அதாவது proffessional கேமராவில்(DSLR) இருக்கும் control வசதிகளும்,consumer கேமராவில் இருக்கும் எளிமைகளும் ஒரு சேர இந்த வகை கேமராவில் இருக்கும்.

இந்த வகை கேமராக்கள் பார்ப்பதற்கு பெரியதாக இருந்தாலும் இதில் பயன்படுத்தப்படும் சென்சார் என்பது பட்ஜெட் மற்றும் advance compact கேமாராக்களில் வரும் சென்சாரின் அளவுகளோ அல்லது கொஞ்சம் அதிக அளவு சென்சார்களை தான் பயன்படுத்துகின்றனர்.
இதன் நன்மைகளை பார்ப்போம்,
1.பெரிய அளவிலான zoom range

இவ்வகை கேமராக்களில் zoom range என்பது மிக அதிகமாக இருக்கும்.. அதாவது 24-600mm,28-700mm என்று அதிக அளவில் இப்பொழுது வரத்தொடங்கி விட்டன.
இந்த மாதிரி zoom range DSLR ல் வாங்க வேண்டும் என்றால் சில சமயம் நாம் சொத்துக்களை விற்க வேண்டியது வரலாம்..
இதனால் அதிக zoom range விரும்புகின்றவர்கள்,பெரிய பெரிய லென்ஸ்களை வாங்கமுடியாத பட்ஜெட் காரணங்களினால் இக்கேமராக்களை வாங்கி பயன் பெறலாம்..
டீசெண்ட்டான wide angle(24mm) முதல் மிக அதிகமான tele end(675mm) வரை ஒரே லென்ஸில் சிறியதாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
இது, பல DSLR லென்ஸ்களை எடுத்து சென்று மிகுந்த சிரமப்படுவதை போல் இல்லாமல் எளிதாகவும்,வெயிட் குறைவாகவும் இருக்கும்.. travelling செல்லும் போது இதன் பயன்பாடு நன்றாக புரியும்.
எனவே இவ்வகை கேமராக்களை super zoom camera என்றும் கூறுகின்றனர்..
2.DSLR மாதிரியிலான கையாலுதல்

சிறிய கேமராக்களில் நாம் படம் எடுக்கும் போது கேமராக்கள் சிறியதாக இருப்பதால் ஆடாமல் எடுக்க சற்று சிரமாக இருக்கும்.
prosumer கேமராக்கள், சிறிய கேமராக்களை போல் சிறியதாக இல்லாமலும் அதே சமயம் பெரிய DSLR வகைகளைப்போல் பெரிதாக இல்லாமலும் இருக்கும்.
இது கிட்டதட்ட DSLR மாதிரி தான் handling இருக்கும்.. இதன் ஷேப் மற்றும் grip இதெல்லாம் ஒரு DSLR மாதிரியே இருக்கும்..
ஒரு சில கேமராக்களில் DSLR லென்ஸ்களை போன்றே நாம் manual ஆக zoom செய்யலாம்.. இதனால் நாம் துள்ளியமாக zoom ஐ பயன்படுத்தலாம்..
இதை ஒரு குட்டி DSLR வகை என்று சொல்லலாம்..
3.DSLR மாதிரியிலான பயன்பாடுகள்


இவ்வகை கேமராக்களில் DSLRல் இருப்பது போல் அததெற்கென deticated பட்டன்கள் இருக்கும். அதாவது exposure , ISO , white balance போன்றவற்றை நாம் மெனுவிற்குள் சென்று மாற்றாமல் உடனடியாக பட்டன்களை பயன்படுத்தி மாற்றிக்கொள்ளலாம்....

நாம் live view ஐ பயன்படுத்தி (மேலே உள்ள படம் மாதிரி)படம் எடுக்கும் போது நமது shoulder தான் நமக்கு துணை.. ஆனால் இந்த மாதிரி நமது shoulder ன் துனையோடு படம் எடுக்கும் போது கண்டிப்பாக படம் ஆடாமல் எடுப்பதும், சில சமயம் சரியாக compose செய்யவும் சிரமமாக இருக்கும்..
ஆனால் இக்கேமராக்களில் DSLR ல் இருப்பது போல் நாம் கண்களை கேமராவுடன் ஒட்டி எடுப்பதற்கு வசதியாக EVF( electronic view finder) வசதியும் உண்டு..

இதனால் நாம் DSLR ல் எடுப்பது போல் ஒரு gripஆக இந்த கேமராவிலும் steady யாக படம் எடுக்கலாம்..

4.பெரிய லென்ஸ்கள்..

இதன் லென்ஸ் என்பது சிறிய கேமராக்களை விட சற்று பெரியது ஆகும்.. இதனால் optical quality என்பது சிறிய கேமராக்களை விட சற்று நன்றாக இருக்கும்.. அதே சமயம் ஒரு சில கேமராக்களில் நாம் DSLR லென்ஸ்களை போல் manual ஆகவும் zoom ஐ பயன்படுத்தலாம்.. இதனால் நாம் சரியான zoom அளவை எளிதாகவும் , வேகமாகவும் பயன்படுத்த முடியும்.
சிறிய கேமராக்களில் உள்ள electronic zoom adjustment ஐ பயன்படுத்தும் போது ஏற்படும் அசெளகர்யங்கள் இதில் (manual zoom) இல்லை..
5.பிற நன்மைகள்
- • aperture range என்பது வேகமாகவும் கிடைக்கும்..
- • raw formatல் படங்களை பதிவு செய்யும் வசதிகள் உண்டு. இதனால் post processing பிரச்சனையில்லாமல் பன்னலாம்
- • external flash சிறிய கேமராக்களின் ஃப்ளாஷ் என்பது மிகவும் குறைவாக தான் இருக்கும்.. பெரிய ஃப்ளாஷ் பயன்படுத்த முடியாது,இவ்வகை prosumer கேமராக்களில் பெரிய external flash களை பயன்படுத்துவதற்கு external hot shoe வசதி கொடுக்கப்பட்டிருக்கும்

- • low noise சிறிய கேமராக்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் noise என்பது குறைவு.. இதனால் ISO வை பயமில்லாமல் அதிகப்படுத்தி படம் எடுக்கலாம்..
- • macro வில் படமெடுப்பது என்பது இவ்வகை கேமராக்களில் மிகவும் நன்றாக depth of field கிடைக்கும்.subjectற்கும் லென்ஸிற்கும் 3cm வரை ஃபோகஸ் ஆகும். பெரிய macro lensல் கூட இவ்வசதி கிடையாது..
இதை தவிர சிறிய கேமராக்களின் நன்மைகளும்( சைஸை தவிர) உண்டு.
குறைகள்
- • இவ்வகை கேமராக்களை பொறுத்த வரையில் zoom range என்பது அதிகமாக தான் இருக்கும். இதனால் கண்டிப்பாக zoom அதிகமாக,அதிகமாக optical quality என்பது கண்டிப்பாக soft ஆக தான் இருக்கும்..
- • DSLR உடன் ஒப்பிட்டு பார்த்தால் prosumer கேமராக்களில் அதிக ISOவை பயன்படுத்தும் போது noise என்பது அதிகமாகவும் , details குறைவாகவும் இருக்கும்
- • நாம் கண்களை ஒட்டி படம் எடுக்கக்கூடிய EVF(electronic view finder) என்பது ஒரு குட்டி LCD finder தான்.. நாம் live viewவில் எப்படி பார்த்து படம் எடுக்கின்றோமோ அதே மாதிரி தான் வேகம் குறைவாக இருக்கும்.. அதே சமயம் அதிக சூரியஒளியில் EVF பயன்படுத்தி படம் எடுப்பதற்கு சற்று சிரமமாக இருக்கும்.. DSLR ல் இருக்கும் optical view finder என்பது இவ்வகை கேமராக்களில் கிடையாது.
- • சிறிய கேமராக்களை விட பெரியதாக இருப்பதாலும்,electrical பயன்பாடு அதிகமாகவும் இருப்பதாலும் பேட்டரி life சற்று குறைவு.
- • என்ன தான் DSLR மாதிரி இருந்தாலும்,இதன் சென்சார் என்பது சிறியது..இதனால் அதிக பிக்ஸல்களை பயன்படுத்தும் போது smudging,artifacts போன்ற திரித்தல்கள் அதிகம் இருக்கும்..post processing என்பது சற்று கடினமே..
- • Auto Focus என்பது வேகம் குறைவாக இருக்கும் (DSLR உடன் ஒப்பிடும் போது).. வெளிச்சம் குறைவான நேரத்தில் சற்று தடுமாறும்.
- • இதன் விலை என்பது கிட்டதட்ட DSLR கேமராக்களின் விலைக்கு இனையாக வரும்.
- • லென்ஸ்களை நம் விருப்பத்திற்கேற்ப மாற்றுவதற்கு வழியே கிடையாது. fixed lens தான்..
தற்போதைக்கு சந்தையில் இருக்கும் சில சிறந்த prosumer கேமராக்கள்:
1.panasonic fz 35 ,2.canon sx 20 IS,
3.nikon P100
மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம் நண்பர்களே..
நன்றி
கருவாயன்
0 comments:
Post a Comment