எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா.. பாகம்-16..INTERCHANGABLE LENS கேமராக்கள்.... MIRROR LESS CAMARA..

16 comments:
 
இதற்கு முன்னர் பகுதியில் DSLR ஐ பற்றிய தகவல்களை நாம் பார்த்தோம்..

1. DSLR கேமராக்கள் ஏன் பெரிதாக் இருக்கின்றன .

2. DSLR சென்சாரின் பல வகைகள்..

3. DSLR நன்மைகள் , குறைகள்

அதன் அளவு பெரியது என்பதையும்,அதற்கான காரணங்களையும் பார்த்தோம்..
பல நன்மைகள் இருந்தாலும் பலர் இவ்வகை DSLR கேமராக்களை வாங்குவதற்கு தயக்கம் காட்டுவார்கள்..

ஒரு சிலருக்கு பட்ஜெட் பிரச்சனை இருக்காது, ஆனால் பெரிய சைஸ் கேமராக்கள் அவர்களுக்கு ஒத்து வராது..பிடிக்காது.

ஒரு சிலர் அதை பெரிய அளவை பார்த்ததுமே ஏதோ பெரிய விசயங்கள் இருக்கும், எனவே நமக்கு அது ஒத்து வராது என்று ஒதுங்கி விடுவார்கள்..

ஆனால் அவர்கள் விரும்புவது, சிறிய சைஸ் கேமராவில் நல்ல குவாலிட்டி படங்கள் எடுக்க வேண்டும்.
இதற்காக விலை எவ்வளவு வேண்டுமானாலும் தர தயாராக இருப்பார்கள்..

ஆனால் சின்ன சென்சார் என்பதால் சிறிய கேமராக்களை வாங்கினால் குவாலிட்டி கொஞ்சம் இருக்காதே... என்ன செய்வது??

DSLR குவாலிட்டியில் படமும் வேண்டும் , அதே சமயம் கேமராவும் சிறியதாக இருக்க வேண்டும்..

சரி இந்த மாதிரி வாடிக்கையாளர்களுக்கு என்ன தான் வழி ?

இவர்களுக்கு ஒரு அருமையான வழி தான் இந்த mirror less கேமரா..



சரி, அதென்ன mirror less கேமரா?


DSLR கேமராக்களை விட சிறியதாக, ஆனால் DSLR போன்றே picture quality மற்றும் செயல்படும் திறன் கொண்ட கேமரா தான் mirror less கேமராவாகும்..


நாம் DSLR ல் பகுதியில் பார்த்திருப்போம்,அதன் பெரிய அளவிற்கு மிக முக்கிய காரணம் optical viewfinder க்காக கேமராவிற்குள் அமைக்கப்படும் mirror box மற்றும் pentaprism தான்..

இந்த mirror box ஐயே இல்லாமல் செய்தால் !!

இதனால், தானாக ஒரு கனிசமான அளவு கேமரா bodyன் அளவு குறையும்.. இதனால் கேமரா பார்ப்பதற்கு ஒரு குட்டி DSLR போல் இருக்கும்..

இந்த படங்களை பார்த்தால் வித்தியாசம் தெரியும்..
(படத்தை பெரிதாக பார்க்கவும்)


இந்த மாதிரி கேமராக்கள் mirror box இல்லாமல் வடிவமைக்கப்பட்டதால் இது mirror less கேமரா என்று கூறப்படுகின்றது..
இந்த mirror box ஐ தூக்கிவிட்டால்...

நாம் முக்கியமாக இரண்டு விசயங்களை தியாகம் செய்ய வேண்டியது தான்..

1.OPTICAL VIEW FINDER:

Mirror Less கேமராவில் , mirror box இல்லாததால் நம்மால் otical view finder ஐ பயன்படுத்த முடியாது..

எனவே optical view finderக்கு பதிலாக சிறிய கேமராக்களில் 
live view ஐ பயன்படுத்துவோமே அது மாதிரி பயன்படுத்தி தான் படமெடுக்க முடியும்.

live view ஐ மட்டும் பயன்படுத்தி படமெடுப்பதற்கு என்றால் mirror box என்பது தேவையில்லை..


2.AUTO FOCUS வேகம்:
இவ்வகை கேமராக்களில் autofocus ன் வேகம் DSLR கேமராக்களை விட சற்று குறைவு தான்..
ஏனென்றால் DSLR ஐ பொறுத்த வரையில் லென்ஸ் வழியாக வரும் ஒளியினை ஒரு பகுதி அப்படியே நேரிடையாக auto focus செய்வதற்கு பயன்படுத்தப்படும்..

Auto Focus ற்க்கு என்று தனியாக சின்னதாக ஒரு சென்சார் இருக்கும்
இதை phase detection auto focus முறை என்று கூறுவர்..

ஆனால் Mirror Less கேமராவிலும் , மற்ற சிறிய கேமராக்களிலும் mirror box இல்லாததால் phase detection auto focus முறையை பயன்படுத்த முடியாது..

அதற்கு பதிலாக contrast detect auto focus முறையை தான் பயன்படுத்த முடியும்..

இது எப்படி என்றால் , லென்ஸ் வழியாக வரும் ஒளியினை சென்சாரில் பதிவு ஆனபிறகே AF செய்ய முடியும்.. இதில் Auto Focusற்க்கு என்று தனியாக சென்சார் எதுவும் கிடையாது..

இதனால் Auto Focus சற்று காலதாமதம் பிடிக்கும்..

ஆனால் சிறிய கேமராக்களை விட, mirror less கேமராவில் சற்று வேகமாக Auto Focus இருக்கும்..
mirror less கேமராவில்.. சென்சார் பெரிது என்பதாலும் , லென்ஸும் பெரிது என்பதாலும், லென்ஸிற்கும் கேமரா பாடிக்கும் தொடர்புகள் அதிகம் என்பதாலும், இதன் AF வேகம் கண்டிப்பாக சிறிய கேமராக்களை விட வேகமாக தான் இருக்கும்..

தற்போதைய technology ன் படி கிட்டதட்ட 70-80 % வரை DSLR கேமராக்களின் AF வேகத்திற்கு சமமாக படம் எடுக்கக்கூடிய contrast detect AF முறைகள் வந்து விட்டன..


mirror less கேமராவின் அமைப்பு:
  • Mirror Less கேமராவில் mirror box இல்லாமல் போவதால் சென்சாருக்கும் , லென்ஸ் mountற்கும் உள்ள தொடர்பு தூரம்(flange back distance) பாதியாக குறைந்து விடுகின்றது..



இதனால் நாம் live view பயன்படுத்தி படம் எடுக்கும் போது DSLR ன் LIVE VIEWஐ விட வேகமாக படம் எடுக்கலாம்,
  • கேமராவிற்கு தகுந்த குறிப்பிட்ட adoptor ஐ பயன்படுத்தி எந்த brand லென்ஸையும் பயன்படுத்த வழி இருக்கின்றது..



ஆனால் இன்றைய technologyல் இந்த மாதிரி பயன்படுத்தும் போது manual focus தான் வழி.. manual focus பிரச்சனை இல்லையென்றால் எந்த ப்ராண்ட் லென்ஸையும் பயன்படுத்தி படம் எடுக்கலாம்.
  • DSLR கேமராக்களை விட ,லென்ஸிற்கும் கேமரா bodyக்கும் உள்ள தொடர்பு புள்ளிகள் அதிகம்.. உதாரணம் இந்த படத்தை பார்க்கவும்..

  • இதனால், live view பயன்படுத்தி படமெடுக்கும் போது நல்ல வேகமாகவும் , smooth ஆகவும் இருக்கும்
  • சிறிய கேமராக்களின் முக்கிய குறையான shutter lag என்பது பல மடங்கு குறைந்து விடும்..
  • contrast detect AF கூட வேகமாக ஃபோகஸ் செய்யும்
  • data processing என்பதும் வேகமாக நடக்கும், இதனால் வீடியோ அருமையாக பெரிய லென்ஸ்களில் அமையும்..
  • அதே சமயம் லென்ஸையும் சிறியதாக வடிவமைக்கலாம் என்பதால் லென்ஸ் diameter அளவும் குறைந்து விடுகின்றது..



பயன் படுத்தப்படும் சென்சார்கள்:

தற்போதைக்கு சந்தையில் olympus , panasonic போன்ற கம்பெனிகள் olympus DSLR ல் பயன்படுத்தப்படும் four third சென்சாரை பயன்படுத்துகின்றன..

இதனால் இவ்வகை கேமராக்கள் MICRO FOUR THIRD கேமராக்கள் என்று கூறுகின்றனர்..



அடுத்த கட்டமாக தற்போது sony மற்றும் samsung கம்பெனிகள் APS-C சைஸ் சென்சாரை பயன்படுத்துகின்றன..


இதன் சென்சார் four third sensorஐ விட சற்று பெரியதாகும்..
இதனால் லென்ஸ் அளவு மற்றும் lens- body mount diameter இரண்டு மட்டும் சற்று பெரிதாக தான் வரும்..



MIRROR LESS கேமரா வகைகள்:

ஒன்று, நாம் live view மட்டுமே பயன்படுத்தி படமெடுப்பதற்கு கேமராவின் பின்னால் இருக்கும் LCD finder ஒன்று மட்டும் தான் வழி..


இதில் view finder என்பது கிடையாது.. எனவே படத்தை shoulder உதவியுடன் arm levelல் தான் கம்போஸ் செய்வதற்கு வழி..

இதனால் தான் கனிசமான அளவில் கேமராவின் BODY அளவு குறைகின்றது..

மற்றொன்று , இந்த வகை கேமராக்களில் optical view finder என்பது சாத்தியமில்லை எனவே , eye level கம்போஸிசன் செய்வதற்கு வழியாக optical view finderற்கு பதிலாக electronic view finder ஐ பயன்படுத்தி படமெடுக்கலாம்..



EVF என்பது ஒரு குட்டி LCD monitor தான்.. EVF ஐ வடிவமைப்பதற்கு mirror box தேவையில்லை..

ஆனால் EVF இருந்தால் சைஸ் கொஞ்சம் பெரியதாகும்... இந்த மாதிரி..

இந்த படத்தில் இருக்கும் இரண்டு கேமராக்களுமே MIRROR LESS கேமரா தான்..

அதே சமயம், சிறிய mirror less கேமராவிலும் EVF பயன்படுத்துவதற்கு வேறு ஒரு வழி உள்ளது..

கேமராவில் hot shoe கொடுத்திருப்பார்கள்..
இதில் external flash ம் பயன்படுத்தலாம் , அதே சமயம் external EVF ஐயும் அதில் பயன்படுத்தலாம்.. இந்த மாதிரி..
Mirror Less கேமராக்களின் நன்மைகள் , குறைகள் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்...

நன்றி
கருவாயன்

0 comments:

Post a Comment

 
Top