எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா?? பாகம் - 7... எந்த ZOOM RANGE வாங்கலாம்...?

19 comments:
 
எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா??

இதற்கு முந்தைய பகுதிகள்....

பகுதி:1 கேமரா வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டியது..
பகுதி:6 கேமராவின் கண்கள் - லென்ஸ் 


ZOOM RANGE

நாம் முதன் முதலில் கேமரா வாங்கும் போது வரும் ஒரு முக்கிய குழப்பம் எந்த zoom range வாங்கலாம் என்பது தான்..

லென்ஸின் zoom range என்பது தூரத்தில் இருப்பதை முன்- பின் நகராமல், வசதியாக ஒரு இடத்தில் இருந்து கொண்டே எளிதாக படம் எடுப்பதற்காக அமைக்கப்படுகின்றன.

இது கீழே உள்ளவாறு இரண்டு வகைகளில் மாறும்..

  1. நாம் கண்களால் அதிகபட்சம் பார்க்க முடிந்த அளவுக்கும் (50mm) கீழ் உள்ள அளவுகளை(35mm,28mm,18mm..etc) wide angle எனவும்,
  2. 50mm மேல் வரும் அளவுகளை (70mm,120mm,200mm,300mm etc) tele photo எனவும் இரண்டு வகைப்படும

24mmற்கும் கீழ் உள்ள zoom range ஆன 10mm முதல் 24mm வரையிலான zoom range அளவுகளை ultra wide angle என்று சொல்வார்கள்.
இந்த ultra wide angle அளவுகள் என்பதை நாம் DSLR லென்ஸில் மட்டுமே காணலாம்..

சிறிய வகை கேமராக்களில் அதிகபட்சமாக wide angle என்பது 24mmல் இருந்து தான் தொடங்குகின்றன.. ultra wide angle என்பது சிறிய கேமராக்களில் இது வரையில் வரவில்லை..

telezoom என்பது 70mm முதல் 200mm வரையிலான அளவுகளை குறிக்கும்..

இதற்கும் மேல் வரும் 200mm முதல் 400mm,600mm etc.. அளவுகளை super telezoom என்று கூறப்படுகின்றன..

விதவிதமான zoom range லென்ஸ்கள்..

DSLR ஐ பொருத்த வரையில் wide angle / tele photo லென்ஸ்கள் என்பது தனித்தனியாகவும் கிடைக்கும்,(உ.ம். 12-24,10-22,10-17.. 70-300,55-200,80-400)

இரண்டும் சேர்ந்தார்போலவும் கிடைக்கும்.. (உ.ம். 18-55,18-70,18-135,18-200)

இதில் நம் விருப்பம் போல் தேவையான லென்ஸ்களை மாற்றிக்கொள்ளலாம்.

ஆனால், சிறிய மற்றும் ப்ரொசுமர் கேமராக்களை பொறுத்த வரையில் லென்ஸ் மற்றும் கேமரா இரண்டும் fixed ஆக தான் வரும்..

லென்ஸ்களை நம் விருப்பம் போல் மாற்றிக்கொள்ள முடியாது.. ஒரு தடவை வாங்கிவிட்டால் அவ்வளவு தான்.. மீண்டும் லென்ஸை மாற்றமுடியாது..

இதனால் தான் சிறிய மற்றும் prosume கேமராக்களில், wide angle மற்றும் telephoto இவ்விரண்டும் சேர்ந்து வருகின்ற மாதிரி பல்வேறு அளவுகளில் zoom range விதவிதமாக வருகின்றன..

24mm-70mm,
28mm-80mm,
35mm-105mm,
35mm-120mm,
24mm-140mm,
28mm-300mm,
35mm-500mm.. etc ,etc..

(மேலே சொன்னது எல்லாம் 35mm format படி உள்ள அளவுகள்..)

சிறிய கேமராக்களில் எல்லாம் மேலே சொன்ன அளவுகளில் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.வேறு அளவுகளில் தான் குறிப்பிட்டிருப்பார்கள்..

6mm-30mm , 4.5mm - 24.5mm...etc என்று தான் குறிப்பிட்டிருப்பார்கள்..

ஆனால் இதன் உண்மையான zoom range என்பது சென்சார்களின் க்ராப்பிற்கு ஏற்ப மாறுபடும்.. (இது எப்படி என்று இந்த பகுதியை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்..)

இதன் உண்மையான அளவு (35mm format) எது என்பதை, நாம் கேமராவின் manualல் தான் பார்த்து தெரிந்து கொள்ளமுடியும்..

WIDE ANGLE VS TELE PHOTO LENS..
சிறிய கேமராக்களில் zoom range என்பது பல வகைகள் வருகின்றன.. இவற்றில் எது முக்கியம்??

உதாரணமாக இரண்டு zoom range களை எடுத்துக்கொள்வோம்..

35mm-105mm மற்றும்
28mm-80mm.

இவ்விரண்டில்
35-105mm ல் tele zoom(80-105mm) அதிகம்,
28 - 80mm ல் wide angle(28-35mm) அதிகம்..

35-105mm zoom range என்பது அளவுகளில் பெரியதாக தெரிந்தாலும், கணக்கு போட்டு பார்த்தால் இரண்டுமே ஒரே X அளவு தான்.

இவ்விரண்டு zoom range ல்,

நாம் 28-80mm lens பயன்படுத்தினால், 80-105mm என்கிற zoom range நமக்கு மிஸ் ஆகின்றது..

105mmல் வைத்து ஒரு இடத்தில் இருந்து படம் எடுப்பதை,80mmல் வைத்து எடுக்கும் போது, இன்னும் ஒரு அடி முன்னே சென்றால் மட்டுமே படம் எடுக்கலாம்..

உதாரணமாக, ஒரே இடத்தில் இருந்து கொண்டு 80mm மற்றும் 105mm ல் வைத்து எடுத்தால் வரும் வித்தியாசத்தை கீழே உள்ள படத்தை பார்த்தால் தெரியும்..

80mm



105mm


80mm ல் வைத்து ஒரு அடி முன்னே சென்று எடுத்தால்,105mm ல் வரும் படத்தை எடுத்து விடலாம்..

80-105mm zoom range ஆல் நமக்கு ஒரு அடி முன்னே செல்வது மிச்சம் ஆகிறது..

இதுவே, 35-105mm பயன்படுத்தினால்,28-35mm என்கிற wide angle zoom range மிஸ் ஆகிறது..

உதாரணமாக, கீழே உள்ள படத்தில் 28mmல் வைத்து, ஒரு இடத்தில் இருந்து 7 நபர்களை எடுக்கலாம் ,

28mm



ஆனால் அதே இடத்தில் இருந்து 35mmல் வைத்து எடுத்தால் 5 நபர்களை தான் எடுக்க முடியும்..
35mm


அப்படி 7 நபர்களையும் எடுக்க வேண்டும் என்றால் இரண்டு அடி பின்னால் செல்ல வேண்டும்..

28mmஆல் நமக்கு இரண்டு அடி பின்னால் செல்வது மிச்சம் ஆகிறது..
  • என்னை பொறுத்த வரையில் முன்னால் செல்வது கொஞ்சம் சுலபம், பின்னால் செல்வது கொஞ்சம் சிரமம்..ஏனென்றால் மேலே உள்ள அந்த சிறுவர்கள் படம் ஒரு சுவரில் சாய்ந்து கொண்டு எடுத்தது..28mm இருந்ததால் என்னால் 7 பேரையும் எடுக்க முடிந்தது.. இதுவே 35mm லென்ஸாக இருந்திருந்தால் நான் பின்னால் போக வேண்டும்.. ஆனால்என்னால் சுவருக்கு பின்னால் போய் எடுக்க முடியாது..இந்த மாதிரி நேரங்களில் wide angle என்பது மிகவும் பயன்படும்.
  • ஒரு இடத்தில் இருந்து 105mm ல் வைத்து எடுப்பதை,80mm ல் வைத்து கொஞ்சம் முன்னே சென்று அதே அளவை எடுத்தால் picture குவாலிட்டி நன்றாக இருக்கும்..
  • இவற்றில் 35mm-105mm என்பது பெரிதாக தோன்றினாலும், 28-80mm என்று இருப்பது தான் நமது பயன்பாட்டிற்கு சிறந்தது என்று சொல்வேன்..
  • அதிக அளவு tele zoom என்பதை விட, குறைந்த wide zoom தான் மிக முக்கியம்..
  • 26mm,24mm என்று வந்தால் ரொம்பவும் நல்லது..
  • ஏனென்றால் LANDSCAPE,GROUP SHOTS,FAMILY SHOTS போன்ற படங்களை எடுக்க wide angle என்பது மிகவும் அவசியம்..
எந்தெந்த zoom range எந்தெந்த படங்களை எடுக்க அவசியம்?

பொதுவாக நாம் அதிகமாக எடுக்க விருப்பபடுகின்ற,

landscape,
mountains,
family shots,
group shots,

போன்ற படங்களை எடுக்க 28mm - 50mm zoom range எனபதே போதும்.. இந்த மாதிரி படங்களை எடுப்பதற்கு wide angle என்பது மிகவும் அவசியம்

அதுவும் ஊட்டி,கொடைக்கானல் போன்ற landscape, mountains போன்றவற்றை எடுக்கும் போது இன்னும் ultra wide angle(12mm-24mm) இருந்தால் இன்னும் சிறப்பாக வரும்...ஆனால் 24mm ற்கும் கீழ் wide angle என்பது சிறிய கேமராக்களில் இப்போதைக்கு வழி இல்லை... DSLR லென்ஸ் மட்டுமே உண்டு..

portrait,
head and shoulder shots,
full standing shots,
table top photos,
குழந்தைகளின் candit shots,
ஒரு சில street photography..

போன்றவற்றை எடுக்க 50mm - 120mm வரையிலான medium telephoto zoom பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்..

தெரியாமல் ஒருவரை எடுப்பதற்கு,
ஒரு சில candit
street photographyக்கு,
tight close up shots
போன்றவற்றை எடுக்க 100mm-250mm இருந்தால் போதும்..

தூரத்தில் இருக்கும் பறவைகளை ,wildlife photos போன்றவைகளை படம் எடுப்பதற்கு மட்டும் தான் 250mm - 500mm வரை வேண்டும் அல்லது சிறிய பறவை/சப்ஜெக்டாக இருந்தால் 500mmற்கும் அதிகமாக இருக்க வேண்டும் .. மற்ற வகை படங்களை எடுப்பதற்கு இந்த zoom range என்பது தேவையில்லை..

இவற்றில் நாம் எந்த வகையில் அதிகம் எடுக்கின்றோம் என்று தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் zoom லென்ஸ் இருந்தால் போதும்.. மற்றபடி அதிக zoom என்பது நமக்கு தேவையில்லை..

டிப்ஸ்
  • 200mm - 500mm போன்ற zoom range ல் படம் எடுக்கும் போது கை உறுதியாக இருந்தால் தான் படம் தெளிவாக எடுக்க முடியும்..
  • zoom range அதிகமாக அதிகமாக சிறிது ஆடினாலும் படம் blur ஆகிவிடும்..
  • அதுவுமில்லாமல் tripod இல்லாமல் 300mm ற்கும் மேல் தெளிவாக படம் எடுப்பது என்பது எளிதான காரியம் இல்லை.. வெளிச்சமும் அதிகம் வேண்டும்..
  • எந்த வகையான zoom lens ஆக இருந்தாலும் 5X ற்கும் மேல் இருந்தால் கண்டிப்பாக picture quality என்பது படிப்படியாக குறைவாக தான் இருக்கும்.. படம் ஷார்ப்னெஸ் இல்லாமல் சாஃப்டாகத்தான் படம் வரும்..
  • அதிகமான zoom range என்றால் விலை அதிகமாக தான் இருக்கும்,இதனால் நல்ல குவாலிட்டியாக தான் இருக்கும்,பலன் அதிகம் என்று அவசரப்பட்டு அதிக விலை கொடுத்து உங்களுக்கு தேவையில்லாத zoom rangeஐ வாங்க வேண்டாம்..
  • எத்தனை முறை நாம் wildlife,பறவைகளை படம் எடுக்கின்றோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.. என்றைக்கோ ஒரு தடவை அதுவும் பழக்கமில்லாமல்,வெளிச்சம் இல்லாமல்,தெளிவுமில்லாமல் எடுப்பதற்காக ஏன் அதிகமான zoom range வாங்கி அதிக விலை குடுக்கவேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்
  • டெலி சூம் என்பது குறைவான வித்தியாசம்(120mm vs 135mm, 105mm vs 120mm..etc.) என்றால் அதை பற்றி கவலைப்படவேண்டாம்.. ஒரு அடி முன்னால் வைத்தால் போதும் அதை எடுத்து விடலாம்.. விலையும் குறைவாக இருக்கும்..இது ஒரு பெரிய விசயமில்லை..
  • ஆனால், வைட் ஆங்கிள் என்பது குறைவான வித்தியாசம்(35mm vs 28mm, 28mm vs 24mm..) என்றாலும் அது நமக்கு அவசியமானதாக இருக்கும்..wide angle என்பது நமக்கு மிகவும் நல்லது..இதற்காக நாம் விலை கொஞ்சம் கூடுதலாக கொடுக்கலாம்.
  • 28mm(35mm formatன் படி) மற்றும் அதற்கும் கீழ் உள்ள அளவுகளில் தொடங்கும் கேமராக்களையே பார்த்து வாங்கவும்.. 35mm என்று தொடங்கும் லென்ஸ்கள் உன்மையான வைட் ஆங்கிள் கிடையாது..
  • தூரமாக இருப்பதை zoom செய்து எடுப்பதை விட முடிந்த அளவு அருகில் சென்று zoomஐ குறைத்து எடுத்தால் படம் நல்ல தெளிவாக வரும்..
  • basic compact கேமராவை பொறுத்த வரையில், நாம் நடைமுறையில் பொதுவாக எடுக்கும் படங்களுக்கு 28-80mm அல்லது 28-105mm zoom அளவே போதும் என்பது என் கருத்து..
  • 120mm க்கும் மேல் வைத்து படம் எடுப்பதற்க்கு compact cameraவை பொருத்த வரையில் LCD finderஐ மட்டும் வைத்து படம் எடுப்பது சற்று சிரமம்..கை கொஞ்சம் நடுங்கினாலும் படம் blur ஆக தான் வரும்.


லென்ஸில் zoom range என்பது முக்கியமாக இருப்பதை போல், நாம் அதிகமாக ஆசைப்படுகின்ற படங்களை எடுப்பதற்கு வேகமான லென்ஸ் தான் முக்கியம்.. இதை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்..
போயிட்டு வரனுங்க....
-கருவாயன்

0 comments:

Post a Comment

 
Top