எந்த கேமரா நமக்கு சிறந்த கேமரா?... பாகம் -2.. எத்தனை மெகாபிக்சல்ஸ் வாங்கலாம்??
நாம் முதன் முதலில் கேமரா வாங்கும் போது எவ்வளவு megapixels கொண்ட கேமரா வாங்கினால் நல்லது என்று முடிவெடுக்க சற்று சிரமப்பட நேரிடலாம்..
உங்களுக்கு தெரிந்ததவரிடம் 6 mp உள்ள கேமரா இருக்கும்,அதனால் அதை விட இன்னொரு மடங்கு அதிகமான 12mp கேமரா வாங்கினால் அவர் வைத்திருப்பதை விட டபுள் குவாலிட்டி இருக்கும் என்று நீங்கள் 12 MP கேமரா வாங்க நினைக்கிறீர்களா? அது முற்றிலும் தவறு...
MEGA PIXELS பற்றி கொஞ்சம் பார்ப்போம் .
MEGA PIXELS என்பது MILLION PIXELS என்றும் அர்த்தம் ஆகும்..ஒரு கேமரா 6MP என்றால்,6 மில்லியன்(60லட்சம்) புள்ளிகள்/பிக்சல்கள் வரை அந்த கேமராவின் சென்சாருக்குள் பதிவு பன்னும் என்று அர்த்தம்.
உன்மையில் picture qualityக்கும் mega pixelsக்கும் சம்பந்தம் மிக குறைவே.. ஒரு படத்தை இரு வேறு pixelகளால்(6MP மற்றும் 12MP) படம் எடுத்து, ஒரு குறிப்பிட்ட அளவு வரை(8 * 12 இன்ச்) பிரிண்ட் போட்டு பார்த்தால் ஒரு வித்தியாசமும் நம்மால் கண்டுபிடிக்க முடியாது..
பொதுவாக ஒரு நல்ல குவாலிட்டி உள்ள 6*4 inch சைஸ் print போடுவதற்கு வெறும் 2 mega pixel கேமராக்களே போதும்.
இந்த சைஸில்(6*4) ப்ரிண்ட் போடுவதற்கு 2 mega pixel இருந்தாலும் ஒன்று தான்,24 mega pixel இருந்தாலும் ஒன்று தான்.
ப்ரிண்ட் சைஸ் மிக பெரியதாக போடுவதற்கு மட்டுமே அதிகமான mega pixels தேவைப்படும்..அதுவும் ஒரு நல்ல குவாலிட்டி உள்ள 6 mega pixel கேமராவிலேயே நாம் அழகாக 16*20 இன்ச் சைஸ் வரை எளிதாக போடலாம்..
6 MP யின் டபுள் size என்பது 12 MP என்று நாம் நினைப்போம்..உன்மையில் அது தவறு..
உதாரனமாக 6MP என்பது, horizontal * vertical ஆக இரண்டாக பிரித்து 3000pixels * 2000pixels = 6000000pixels(6MP) என்று தான் அளவிடப்படும்..
எனவே இதன் இரண்டு மடங்கு என்பது 6000 * 4000 = 24MP என்பதே சரியாகும்..
6mpயின் இரு மடங்கு என்பது 6mp * 2 times= 12mp என்று சொல்வது தவறாகும்...
ஆகையால் 6MP க்கும் 12MPக்கும் மிக பெரிய வித்தியாசம் எதுவும் நாம் பயன்படுத்தும் நடைமுறையில் கண்டு பிடிக்க முடியாது..எனவே ஒரு கேமரா வாங்கும் போது 6 முதல் 10 MP என்பதே நம் நடைமுறை பயன்பாட்டிற்க்கு போதும்..
ஒரு சிலர் சிறிய சைஸ் ப்ரிண்ட் கூட போட மாட்டார்கள்..அவர்கள் computerல் மட்டுமே பார்க்க பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு இன்னும் குறைவான MP யே போதும்..
ஒரு 14 inch computer moniter ல் முழு அளவில் பார்ப்பதற்கு 2 MP என்பதே அதிகம். 21 இன்ச் மானிடரில் பார்ப்பதற்கு 4mp என்பதே போதும்.
ஏனென்றால் ஒரு நல்ல computer moniter என்பது 100 PPI/DPI யால் அளவிட படுகிற்து.. அல்லது ஒரு படத்தை computerல் பார்க்க 100PPI இருந்தால் போதும்.
PPI/DPI என்றால் என்ன?
PPI என்றால் pixels per inch, DPI என்றால் dots per inch என்பதின் சுருக்கம்..இரண்டும் ஒன்று தான்.
அதாவது நாம் computerல் பார்ப்பதற்கு,பிரிண்ட் போட்டு பார்ப்பதற்கு,high quality மாத இதழ்களில் வெளிவருவதற்கு ஒரு இன்ச் சதுர அளவிற்கு குறைந்தபட்சம் தேவைப்படும் pixel மற்றும் dots(print resolution) அளவு என்பதாகும்.
இதை நாம் ஒரு படம் எடுத்து EXIFல் பார்த்தால் எத்தனை DPI உள்ளது என்று தெரியும் .. இது சில சமயம் 92dpi,300dpi என்று settingsற்கு தகுந்த மாதிரி மாறி இருக்க வாய்ப்புண்டு
PPI/DPI எதற்கு?
ஒரு 6 mp கேமராவில் படம் எடுத்தால்,அந்த படத்தில் 60 லட்சம் pixelகள்(6MP) இருக்கும்.
உதாரணமாக ஒரு 12 inch X 8 inch சைஸ் கொண்ட 14 இன்ச் computer மானிட்டரில் பார்க்கும் போது
ஒரு இன்ச் சதுர அளவிற்கு குறைந்த பட்சம் 100 பிக்சல்கள்(100 PPI) இருந்தால் போதும்.
அதாவது 12 X 8(14inch monitor)ல்
12இன்ச்X 100pixels =1200 pixels
8இன்ச்X100pixels= 800 pixels
மொத்தமாக
1200 X 800 = 9,60,000(0.96mp) பிக்சல்கள் இருந்தால் 14இன்ச் மானிட்டருக்கு போதும்.
ஆனால் நம்மிடம் 60 லட்சம்(6MP) பிக்சல்கள் உள்ளது. இதை வைத்து நாம் கிட்டதட்ட 20 X 30 இன்ச் சைஸ் வரை கொண்ட மானிடரில் கூட பார்க்கலாம்
ஆனால்,100 pixels per inch இருந்தால் computer moniterக்கு மட்டும் தான் குறைந்தபட்சம் போதும் என்பது ஒரு கணக்கு..
இதுவே, நார்மல் குவாலிட்டி ப்ரிண்ட் போடுவதற்கு குறைந்தபட்சம் 150 PPI யும்,
நல்ல குவாலிட்டி ப்ரிண்ட் போடுவதற்கு குறந்தபட்சம் 200-250 PPI யும்,
magazine களில் ப்ரிண்ட் செய்வதற்கு குறைந்தபட்சம் 300PPI யும்,
தேவைப்படும்.
இதனால் நம் தேவைக்கேற்ப PPI or DPI calculationஐ gimp softwareல் அல்லது photoshopல் உள்ள print resolutionல் நாம் பார்த்து நமக்கு தேவையான பிர்ண்ட் சைஸை மாற்றிக்கொள்ளலாம்,தெரிந்து கொள்ளலாம்
.
PPI ஐ அதிகமாக்கினால் ப்ரிண்டின் அளவு குறைய தொடங்கும், ஆனால் நாம் எடுத்த இமேஜ் resolution(MP) என்பது குறையாது. PPI/DPI என்பதை வைத்து நம்மிடம் இருக்கும் pixelsன் அளவில் எந்த அளவு வரை பிரிண்ட் போடலாம் என்பதை தெரிந்து கொள்ள உதவும்.
உதாரணமாக, 6 MP கேமராவில் .
EXIFல்100 PPI என்று இருந்தால், அதில் 20 * 30 இன்ச் வரை ப்ரிண்ட் சைஸ் வரை போடலாம் என்று calculationல் இருக்கும். இதுவே நல்ல குவாலிட்டி ப்ரிண்ட் போடுவதற்கு 200PPI தேவைப்படுவதால், நாம் PPIஐ settingsல் அதிகபடுத்தவேண்டும்..அப்படி அதிகபடுத்தும் போது automaticஆக அதிகபட்ச பிரிண்ட் சைஸ் அளவு 10 * 15 இன்ச் என்று குறையதொடங்கும்.
இதே 200DPI அளவில் இந்த அளவுக்கும் மேல் ப்ரிண்ட் போட வேண்டுமென்றால் PPI யின் அளவை குறைத்தால் தான் முடியும்..அப்படி குறைக்கும் போது பிரிண்ட் குவாலிட்டி கொஞ்சம் கொஞ்சமாக PPIயின் அளவுகேற்ப குறைய தொடங்கும்.இந்த மாதிரி நேரத்தில் தான் அதிக pixels தேவைப்படும்..
இது megapixelsன் அளவுகளுக்கேற்ப மாறுபடும்.
.
கீழே உள்ள TABLE CHARTல் இதை பார்க்கலாம்..
FOR HIGH QUALITY PUBLISHING AND ADVERTISING
இதை தவிர இந்த calculationஐ gimp,photoshop போன்ற photo editing softwareகளில் உள்ள print resolution செட்டப்பில் நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதே சமயம் அதிக pixels என்பது தேவையில்லை என்று அர்த்தம் இல்லை..பிக்சல்ஸ்களால் சில நன்மைகளும் உண்டு,அதை பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்..
அது வரைக்கும் போயிட்டு வாரனுங்..
-கருவாயன்.

Print size (இன்ச்)
|
Print resolution
|
Image resolution
|
போதுமான MP
| |
4 X 6
|
300 DPI
|
1800 X 1200
|
2.1 MP
| |
5 X 7
|
300 DPI
|
2100 X 1800
|
3.2 MP
| |
6 X 8
|
300 DPI
|
2400 X 1800
|
4.3 MP
| |
8 X 12
|
300 DPI
|
3600 X 2400
|
8.6 MP
| |
16 X 20
|
300 DPI
|
6000 X 4800
|
28.8 MP
|
FOR HIGH QUALITY PRINTING
4 X 6
|
240 DPI
|
1440 X 960
|
1.4 MP
|
5 X 7
|
240 DPI
|
1680 X 1200
|
2.0 MP
|
6 X 8
|
240 DPI
|
1920 X 1440
|
2.8 MP
|
8 X 12
|
240 DPI
|
2880 X 1920
|
5.5 MP
|
16 X 20
|
240 DPI
|
4800 X 3840
|
18.2 MP
|
FOR COMPUTER MONITOR AND GENERAL PHOTO PRINTING
8 X 12
|
100 DPI
|
1200 X 800
|
0.96 MP
|
16 X 20
|
100 DPI
|
2000 X 1600
|
3.2 MP
|
20 X 30
|
100 DPI
|
3000 X 2000
|
6.0 MP
|
24 X 36
|
100 DPI
|
3600 X 2400
|
8.64 MP
|
இதை தவிர இந்த calculationஐ gimp,photoshop போன்ற photo editing softwareகளில் உள்ள print resolution செட்டப்பில் நாம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதே சமயம் அதிக pixels என்பது தேவையில்லை என்று அர்த்தம் இல்லை..பிக்சல்ஸ்களால் சில நன்மைகளும் உண்டு,அதை பற்றி அடுத்த பாகத்தில் பார்ப்போம்..
அது வரைக்கும் போயிட்டு வாரனுங்..
-கருவாயன்.
0 comments:
Post a Comment