ISO - சிறு குறிப்பு

19 comments:
 
வணக்கம் மக்கா,
வழக்கமா நாம படம் எடுக்கும் போது அபெர்ட்சர்(aperature) மற்றும் மூடுதிரை வேகம்(shutter speed) ஆகியவற்றை கருத்திற்கொண்டு எடுப்போம், இப்போ மூனாவதா ஒரு விடயத்தை பற்றி பாப்போம்.

ISO என்றால் (சர்வதேச நியதிகள் நிறுவனம் -International Organization for Standardization) .இவங்க பல பொருட்களின் அளவு, வடிவம், தரம், செந்தர வரையேடுகள்(standards) மற்றும் செயல் வழிமுறைகளை முறைப்படுத்தும் பணியினை செய்கிறார்கள். புகைப்படகலையில் ISO என்பது ஒளிபெட்டியின் உணரியின்(sensor) உணர்திறன்(sensitivity) அளப்பீடு. ISO அதிகரிக்க அதிகரிக்க உணரியின் ஒளி கிரகிக்கும் திறன் கூடுகிறது. இதனால் குறைந்த ஒளியில் கூட முக்காலி இல்லாமல் படம் எடுக்கலாம். பொதுவா ISO பின்வரும் அளபீடுகளில் இருக்கும் (100, 200, 320, 400, 640, 800, 1600 ....). ISO 100 என்பது அடிப்படை அளவு, இந்த ISO வில் தான் பெரும்பான்மையான நேரங்களில் படம் எடுப்போம்.

நீங்க ஒரு மீன்காட்சியகத்திலோ அல்லது உள்அரங்கு மேடை நிகழ்ச்சிகளை படம் பிடிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இவை இரண்டுமே ஒளி குறைவான இடங்கள். ISO 100 வச்சு படம் எடுக்கும்போது மூடுதிரை வேகம் மிக குறைவா தான் இருக்கும்( <>ஒளி இரைச்சல் அதிகமாக இருக்கும். DSLR ஒளிபெட்டியில் சத்த அளவு குறைவு. சத்தத்தின் அளவு ஒளிபெட்டியின் உணரியின் படத்துணுக்கு(pixel) அளவை பொருத்தது. படத்துணுக்கு அளவு சிறியதாக இருந்தால் படங்களில் ஒளி இரைச்சல் அளவு கூடும். (அதிகம் மெகாபிக்சல் உள்ள காமிராக்களில்[குறிப்பா பாயிண்ட் அண்ட் சூட்] படதுணுக்கின் அளவு குறைவாக இருக்கும், இதனால் ஒளி இரைச்சல் அதிகம் வரும்) பொதுவா ISO 100 வைத்தே படம் எடுங்கள். ஒளி குறைபாடு இருக்கும் போது மற்ற அதிக ISO அளவுகளை பயன் படுத்துங்கள். சிறிது ஒளி இரைச்சல் படங்களில் இருந்தால் கவலை படவேண்டாம். படங்களில் சத்தத்தை நீக்கும் இலவச மென்பொருட்கள் இணையத்தில் இருக்கின்றன. சில சமயங்களில் நல்ல ஒளி இருந்தும் கூட ISO கூட்டி வைக்கும் சூழ்நிலை ஏற்படும். விளையாட்டு நிகழ்ச்சிகளை படம் எடுக்கறவங்களுக்கு மூடுதிரை வேகம் 1/1000, 1/2000 இப்படி தேவை படும்(சிறு சிறு அசைவுகளை படம் பிடிக்க). உங்களுடைய ஒளிபெட்டியின் ISO செயல் முறைகளை அறிந்து கொண்டு முயற்சி செய்து பாருங்கள். கவனத்தில் வைத்து கொள்ள கூடிய ஒன்று இருக்கு. முதல் நாள் ISO அதிகம் வச்சு படம் எடுத்துட்டு அடுத்த நாள் காலையில் நல்ல வெளிச்சம் இருக்கும்போதும் கூட ISO அளவை மாத்த மறந்துட்டு ஒளி இரைச்சல் உள்ள படங்களை எடுக்க நேரிடலாம். அதனால் ஒவ்வொரு முறை ஒளிபெட்டியினை பயன் படுத்தும்போதும் ISO அளவினை சரி பார்த்துக் கொள்ளுங்கள். மற்றுமொரு விடயம், இப்பொழுது வரும் காமிராக்களில் "ஆட்டோ ISO" என்ற நுட்பம் வருகின்றது. இதன் பயன் என்னவென்றால், குறைந்தப்பட்ச மூடுதிரை வேக அளவை குறிப்பிட்டால், சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் ஒளிபெட்டி தானே ISO அளவுகளை மாற்றி அமைத்து கொண்டுவிடும். "Long Exposure" போன்று முக்காலி உதவியுடன் படம் எடுக்கும் போது இந்த "ஆட்டோ ISO" வை நிறுத்தி விடுங்கள். இன்னும் வேற எதாவது இருந்தா பின்னூட்டத்துல சொல்லுங்க. நன்றி !

0 comments:

Post a Comment

 
Top